நீ இல்லை நிலவில்லை (பூச்சூடவா)

விட்டு போன மெட்டுக்களை மீட்டிப் பார்ப்பதில் எத்தனை சுகம். 1997 இல் வெளியான பூச்சூடவா சிம்ரனுக்காகவே பரவலாகப் பார்க்கப்பட்ட படம். அதே வருடம் ஒன்ஸ் மோரில் அறிமுகமாகி, தொடர்ந்து நேருக்கு நேர், விஐபி என கோலிவுட்டின் lucky charm ஆக வலம் வந்த சிம்ரன்; கூடவே சிற்பியின் அட்டகாசமான இசையும் சேர வந்த இளமை துள்ளும் காதல் கதை. விஐபி, ப்ரியா ஓ ப்ரியா (தெலுங்கு) தொடர்ந்து அப்பாஸ் – சிம்ரன் இணைந்து நடித்தது. ஆல்ப்ஸ் மலை காற்று (தேடினேன் வந்தது), நான்  வானவில்லையே பார்த்தேன், குமுதம் போல் வந்த குமரியே (மூவேந்தர்), லைலா லைலா (நந்தினி), காதலின் பார்முலா (பெரிய இடத்து மாப்பிள்ளை) என சிற்பி பரவலான ஹிட்டுகளைக் கொடுத்த நேரம் வெளியான பாடல் தொகுப்பு இது.

பழனிபாரதி வரிகளில் ஹரிஹரன் பாடிய மென்சோகப் பாடலான “நீ இல்லை நிலவில்லை…”, “வாலிப வயசுக்கு வங்கக்கடல்…”, SPB – சித்ரா இணைத்து பாடிய peppy duet ஆன “காதல் காதல் காதல்…”, மனோவின் மாறுபட்ட குரலில் இடம் பெறும் teasing பாடலான “கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கிளியே…” என அத்தனை பாடல்களும் ரொம்பவே பிரபலம்.

பகலின்றி வாழ்ந்திருதேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்லு…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s