இதயத்தைக் காணவில்லை (உன்னைக் கொடு என்னைத் தருவேன்)

வெளிவந்த புதிதில் அதிகம் கவனம் பெறாது, பின்னர் தவறவிட்டமைக்காக காலம் கடந்து வருத்தப்பட்ட பாடல்களில் இந்த “இதயத்தைக் காணவில்லை…” பாடலுக்கு என்றுமே தனி இடம் உண்டு. படம் தந்த மோசமான அனுபவத்தால் கேட்காமல் விடுபட்டுப் போகப், பின்னாட்களில் ஹரிஹரன் குரலுக்கு அடிமையாகத் தொடங்கிய வேளை மீண்டும் மீட்டெடுத்த பாடல். வாலியின் வரிகளில் என்னையே நான் தொலைத்த அனுபவத்தை என்றுமே மறக்க இயலாது.

வானில் இருந்து வானவில் ஒன்று மண்ணில் இறங்கி வந்ததுவோ
மங்கை அவளது மந்திர கண்கள் சந்திர சூரியன் ஆனதுவோ
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு
அவள் பாதகொலுசொலி கேட்கும் போது

இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை

அவள் வருவாளா மற்றும் வாலி வெற்றியைத் தொடர்ந்து அஜித்சிம்ரன் இணைந்து கவி காளிதாஸ் இயக்கத்தில் வெளியான படம் உன்னைக் கொடு என்னைத் தருவேன். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் எல்லாமே பிரபலமானதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. மோசமான திரைக்கதையால் தோல்வியைத் தழுவியது. மேலும் உன்னி கிருஷ்ணன் தனித்துப் பாடிய “சாட்டிலைட்டில் ஏறி…”, சித்ராவுடன் இணைந்து பாடிய “உன்னைக் கொடு என்னைத் தருவேன்…” மற்றும் ஷங்கர் மஹாதேவன் – அனுராதா ஸ்ரீராம் பாடிய “இடுப்பு சேலைக்குள்ள…” என மாறுபட்ட பாடல்களுடன் கூடிய இசைத்தொகுப்பு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s