யார் வந்து பூவுக்குள் (கண்டேன் சீதையை)

90 களில் என் காதல் கண்மணி மூலம் அறிமுகமான விக்ரமுக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்தது பாலாவின் சேது. தொடர்ந்து 2001 இல் வெளியான கண்டேன் சீதையை நேரடித் தமிழ்ப்படம் அல்ல. இது க்ராந்தி குமார் இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படமான 9 Nelalu படத்தின் மொழி பெயர்ப்புப் பதிப்பு. கணவனின் மருத்துவச் செலவுக்காக சோதனை குழாய் மூலம் கருத்தரிக்கும் பெண்ணும், அதைத் தொடர்ந்து அவள் சந்திக்கும் சமூகச் சிக்கல்களுமாக நகரும் கதை; தனது அபரிமிதமான நடிப்பால் மொத்தப் படத்தையும் தாங்கியிருப்பார் சௌந்தர்யா. கதைக்காக பேசப்பட்டாலும் தமிழில் பெரிதாகப் போகவில்லை.

ஆரம்பத்தில் ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகிப் பின்னர் பட்ஜெட் காரணமாக உதயா இசையமைக்க நேர்ந்தது. உன்னி கிருஷ்ணன் மற்றும் ஹரிணி குரலில் இடம்பெறும் தனிப்பாடலான “யார் வந்து பூவுக்குள் கிச்சுகிச்சு மூட்டியதோ…” என்றென்றும் என் விருப்பத்தேர்வுகளில் ஒன்று.

யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள் புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எறிகிறதே
வண்ணத்து பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிப திறைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும் தென்றலும் பூக்களை மோதும்

Unni Krishnan Version:

Harini Version:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s