குயிலே இளமாங்குயிலே (செந்தமிழ்ச் செல்வன்)

இளையராஜா – M.S.விஸ்வநாதன் எனும் இரு துருவங்கள் இணைந்து பணியாற்றும் பொழுது பாடல்கள் என்ன திகட்டவா செய்யும்? மெல்லத் திறந்தது கதவில் தொடங்கிய இந்தக் கூட்டணி ஒரு படத்தோடு நில்லாமல் செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன், இரும்புப் பூக்கள், என் இனிய பொன் நிலாவே, விஷ்வ துளசி வரை தொடர்ந்தது தமிழிசை ரசிகர்களின் அதிர்ஷ்டம் தான்.

குயிலே இளமாங்குயிலே
உந்தன் கூட்டிலிருந்து வெளியில் வந்து பாடு
கேட்டு அதை தான் கேட்டு
மெல்ல திரும்பும் எந்தன் தாயின் பழைய நினைவு 

SPB இன் குரலில் சரணம் ஆரம்பிக்கும் பொழுதே ஒரு மெல்லிய சோகம் மனதை வியாபிக்கத் தொடங்கும். தொடர்ந்து வரும் மெட்டுக்கள், சரணத்தை எட்டும் பொழுது தாய்க்கு மகன் பாடும் ஆனந்தத் தாலாட்டாக மாறும் விதம் அருமை. அதிலும் முதல் சரணத்தை எப்போது கேட்டாலும் வாலியின் வரிகளில் மெய் மறந்து போவது நிச்சயம். இதே பாடல் சித்ராவின் குரலில் 2 நிமிடத் தனிப்பாடலாகக் உண்டு.

இறவாத தமிழ் கொண்டு இசை பாடினால்
திறவாத கதவேதும் கிடையாதம்மா
தொலைதூரம் இருக்கின்ற தொடுவான் வரை
தமிழ்ப் பாடல் போய்ச் சேரத் தடையேதம்மா
ஒரு நாள் வரும் திருநாள் வரும்
நான் யாரென்று தாய் கண்டு மகனே எனலாம்
விழியீரமும் மனபாரமும் இனி
ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்

மனோஜ் குமார் இயக்கத்தில் 1994 இல் பிரசாந்த்மதுபாலா இணைந்து நடித்த செந்தமிழ்ச் செல்வன் பெரிதாகப் பேசப்படுத்து விடினும் பாடல்கள் சோபிக்கத் தவறவில்லை. SPB பாடிய மற்றுமொரு அழகான மெல்லிசைப் பாடாலான “பாட்டு இசைப்பாட்டு” , SPB – சித்ரா இணைந்து பாடிய டூயட்டான “ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு”, சோகப்பாடலான “கூடு எங்கே தேடிக் கிளிரெண்டு தடுமாறுதிங்கே ” என வித்யாசமான பாடல்களைக் கொண்ட இசைத்தொகுப்பு.

SPB Version

Chithra’s Version

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s