போகன் (2017)

தனியொருவனில் ராஜா உருவாக்கிய வெற்றிக் கூட்டணியை வைத்து மறுபடியும் ஃபுல் மீல்ஸ் போட்டிருக்கிறார் இயக்குனர் லக்‌ஷ்மன். தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாக போகரின் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையைத் துணை கொண்டு ஹீரோ வில்லனாகவும் வில்லன் ஹீரோவாகவும் மாறி ஆடும் சடுகுடு ஆட்டம் தான் இந்த போகன்.

சந்தேகமே இல்லாமல் படத்தின் ஹீரோ அர்விந்தசுவாமி தான். அறிமுகத்திற்கே தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. பார்வையிலேயே என்னா வில்லத்தனம்? பாரில் ரவியுடன் லூட்டி அடிப்பதும், கஸ்டடியில் இருக்கும் போதே பெண் போலீஸ் அக்‌ஷரா விற்கு ரூட்டு விடுவதும், ரவி உடம்புக்குள்ளேயே கூடு விட்டுக் கூடு பாய்வதும், இடைவேளைக்குப் பின் ரவியாக மாறி அடக்கி வசிப்பதும், ஹன்சிகாவை அடைய நினைத்து பல்பு வாங்குவதுமாக அட்டகாசமாக இருக்கிறது அர்விந்தசுவாமியின் அசால்டான பெர்பாமன்ஸ். அர்விந்த சுவாமியின் ஆதித்யா கதாப்பாத்திரத்திற்காகவே வசனங்களைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார் லக்‌ஷ்மன்.

bog2

ஜெயம்ரவி வில்லனுக்காக ரொம்பவே விட்டுக் கொடுத்து நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அர்விந்த சுவாமியாக மாறியதும் அதே மேனரிசத்தில் கலக்கி இருக்கிறார். இரண்டு ஹீரோக்களும் ஸ்க்ரீனைப் பங்கு போட்டுக் கொள்ள தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் ஸ்கோர் செய்கிறார் ஹன்சிகா. கல்யாணத்தை நிறுத்த சரக்கடிப்பதும் போலீஸீல் மாட்டியதும் உதார் விடுவதும், தற்காப்புக் கலை மூலம் அர்விந்த சுவாமியாக மாறிய ரவியிடம் இருந்து எஸ்கேப் ஆவதும், க்ளைமாக்ஸில் ரவியை ப்ளாக்மெயில் செய்வதுமாய்க் முடிந்த வரை நடித்திருக்கிறார். அதிலும் வாராய் நீ வாராய் பாடல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

ரோமியோ ஜூலியட்டைத் தொடர்ந்து லக்‌ஷ்மனுக்கு இரண்டாவது படம். சுவாரசியமான காட்சி அமைப்புக்களால் கவனிக்க வைக்கிறார். பலமான ஹீரோ, வில்லன் என்ட்ரி, இருவருக்கும் இடையிலான அட்டகாசமான சந்திப்பு, கூடு விட்டுக் கூடு மாறியதும் intro block எனப் பரபரப்பிற்குப் பஞ்சமே இல்லாமல் நகர்கிறது திரைக்கதை; ஆன்டனியின் எடிட்டிங் பக்கபலம்.

bog3

பிரபுதேவாவின் தயாரிப்பு என்பதாலோ என்னவோ நாகேந்திர பிரசாத்தை மீண்டும் திரையில் காண முடிகிறது. சரியான காஸ்டிங் படத்தின் இன்னொரு பலம். ஆடுகளம் நரேன், பொன்வண்ணன், நாசர் என அனைவரும் தன் பங்கை செவ்வனே செய்கின்றனர்.

இமானின் இசையில் தாமரை எழுதிய செந்தூரா பாடல் தான் டாப். சௌந்தர் ராஜன் படமாக்கிய விதமும் அருமை. மதன் கார்க்கியின் கூடு விட்டுக் கூடு பாடலைத் தூக்கி நிறுத்துவது அர்விந்த சுவாமியின் குரலும் பெர்பாம்ன்ஸுமே. டமாலு டுமீலு பாடல் கலர்ஃபுல். பின்னணி இசை, தீம் மியூசில் கூட கவனிக்க வைக்கிறார் இமான்.

இரண்டாம் பாதியில் கமிஷனரைக் கொன்று விட்டுக் கூலாக வில்லன் நடந்து வருவதும், அவ்வளவு எளிதாக மருத்துவமனையில் போலீஸிடம் இருந்து ஹீரோ தப்பிப்பதும், க்ளைமாக்ஸில் சிறு கீறல் கூட இல்லாமலே ஹீரோ கமிஷனர் ஆபீசில் நுழைவதும் அக்மார்க் சினிமாத்தனம். மொத்தத்தில் போகன் – An awesome chemistry between Arvind swamy & Ravi. Don’t miss it.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s