லைலா லைலா நீ தானே (நந்தினி )

லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா

இந்தப் பாடல் பலருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கால நினைவுகளை பசுமையாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று. மனோபாலா இயக்கத்தில் 1997 இல் வெளியான நந்தினி படத்திற்காக பழனிபாரதி எழுதியது. அந்த ஆண்டின் பரபரப்பான பாடல்கள் (Sensational Hits) வரிசையில் இப்பாடலுக்குத் தனி இடம் உண்டு. சரியான இசைத்தொகுப்புக்கள் கிடைக்காத காரணத்தின் பொருட்டு அதிகம் கேட்காமல் விடுபட்டுப் போனதென்னவோ துரதிஷ்டம் தான். S.P.B – சித்ரா குரலில் பிரகாஷ்ராஜ் – சுஹாசினி ஜோடியின் பின்னணியில் ஒலிக்கும் குறும்பான பாடல்.

என் உயிரினில் விழுந்து ஓடும் அதிசய மின்னல் நீ
என் சேலை பூவில் உறங்கும் ரகசிய தென்றல் நீ
ஒரு பாலைவனத்தில் பாயும் வாலிப கங்கை நீ
தினம் காதல் நெருப்பில் என்னை உருக்கும் தங்கம் நீ
என் வானம் என் பூமி என் வாழ்க்கை என் வேட்கை
எல்லாம் இங்கே நீயே தான் வா அன்பே

சிற்பியின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும் ரகம். அதிலும் S.P.B பாடிய “கண்ணிரண்டும் உன்னைத் தேடுதடி காதல் கிளியே பூ முகம் காட்டு…” அதிகம் பிரபலம். (பட்டசரக்கு எனும் பல்லவி தான் பலருக்கு ஞாபகம் இருக்கும்.) சற்றே Why this kolaveri வகையறாவைச் சேர்ந்த பிற்போக்குத் தனமான வரிகள் ஆதலால் அப்பாடலை நெஞ்சில்_நின்ற_ராகங்கள் வரிசையில் சேர்க்கவில்லை. வினித் – கீர்த்தி ரெட்டி கூடவே S.P.B யும் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்ததாக ஞாபகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s