குற்றம் 23 (2017)

திறமை இருந்தும் தகுந்த வாய்ப்பின்றித் தவித்த அருண்விஜய்க்கு சரியான ப்ரேக் கொடுத்தது தடையறத் தாக்க. தொடர்ந்து என்னை அறிந்தால், குற்றம் 23 என அவர் காட்டும் பரிமாணம் அசத்தல் ரகம். அவரது அநுபவமும் திரை ஆளுமையும் ரொம்பவே கை கொடுக்கிறது. காட்டுக் கத்தல் கத்திக் கடுப்பேற்றும் துரைசிங்களுக்கு மத்தியிலே எந்தவொரு ஆர்பாட்டமும் இல்லாமல் நிதானமாக சிந்தித்து செயலாற்றுவதில் மனதைத் கவர்கிறது அவரது வெற்றிமாறன் கதாப்பாத்திரம். விளம்பர உத்திகள் படத்தை வெகுஜன ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தால் முன்னணி நாயகர் வரிசையில் அருண்விஜய் இடம்பெற வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

க்ரைம் த்ரில்லர்களில் கை தேர்ந்தவர் என்பதை ஈரம் படத்திலேயே நிருபித்து விட்டார் இயக்குனர் அறிவழகன். இந்த முறை நாவலாசிரியர் ராஜேஷ் குமாரின் கதைக்குத் தன் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் காட்சிகளை நகர்த்தியுள்ளார். சர்ச்சில் நடக்கும் இரு கொலைகளுடன் விரியும் அந்த முதல் காட்சி பரபர நிமிடங்கள். தொடர்ந்து வேகமெடுக்கும் திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை சீட்டின் நுனியிலேயே இருக்கச் செய்து விடுகிறது.

kut2

கதையின் அடிநாதமே அபிநயாவை மையப்படுத்தியே நகர்கிறது. நிச்சயம் பெயர் சொல்லும் கதாப்பாத்திரம். குழந்தைக்காக ஏங்குவதாகட்டும், செயற்கைக் கருத்தரிப்பிற்குக் கணவரின் உயிரணு காரணமில்லை என அறிந்து மனதிற்குள் புளுங்குவதாகட்டும், விரக்தியின் உச்சக்கட்டத்தில் கருவைக் கலைத்து விட டாக்டரிடம் கெஞ்சுவதாகட்டும் அடடா… அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ். மரணத்தின் தறுவாயிலில் அர்விந்த் ஆகாஷ் மறுவாய்ப்புக் கொடுக்கும் போது கூட அதைக் கண்களாலேயே அபிநயா அசால்டாக மறுக்கும் காட்சி கலங்க வைக்கிறது.

புயலாக வேகமெடுக்கும் கதையில் இதமான தென்றலாக வந்து போகிறார் மகிமா நம்பியார். அவ்வப்போது செல்லச் சண்டைகள் போட்டு ரிலாக்ஸ் செய்கிறார். KMKV புகழ் அமீத் பார்கவ்விற்கு நல்ல பாத்திரம்; கௌரவத் தோற்றத்தில் விஜயகுமார்; சின்னத்திரை நட்சத்திரங்களான தேவ் ஆனந்த், நீலிமா ராணி, வெங்கட் ரங்கநாதன், அழகேஷ் துணைக் கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.

kut3

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பூஸ்ட் ஏத்துகிறது.
விவேகாவின் வரிகளில் “குறி வைத்துக் கைது செய்யும்”, மற்றும் “தொடுவானம் நேற்று வரை” இரண்டு பாடல்களுமே கேட்கும் ரகம். கதையினூடே நகர்வதால் உறுத்தலாகத் தெரியவில்லை. பாஸ்கரனின் ஒளிப்பதிவும் புவனின் படத்தொகுப்பும் பக்க பலம்; ஸ்டன்ட் சில்வா சண்டைக் காட்சிகளில் அனல் தெறிக்கிறது.

மிக வேகமாக நகரும் க்ளைமாக்ஸ் காட்சிகள் கவனச் சிதறலுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது. எடிட்டரே கவனிக்கவும்!!! வில்லனின் பின்னணி விரிவாக விபரிக்கப்பட்டாலும் வம்சி க்ருஷ்னா பெர்பாம் பண்ணும் அளவிற்குக் காட்சிகள் இல்லாதது குறையே.

தாய்மை பெற்றெடுப்பதில் மட்டுமல்ல தத்தெடுப்பதிலும் உள்ளது எனச் சொல்ல வந்த கருத்துக்குப் பாராட்டுக்கள். மொத்தத்தில் குற்றம் 23 – ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க பாஸ். உடனே போய் தியேட்டர்ல பாருங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s