பூந்தென்றலே நீ பாடிவா (மனசுக்குள் மத்தாப்பூ)

வெற்றிக் கூட்டணியான இரட்டை இயக்குனர்கள் ராபர்ட்ராஜசேகர் இயக்கத்தில் பாலைவனைச்சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு படங்களைத் தொடர்ந்து வெளியான படைப்பு மனசுக்குள் மத்தாப்பூ. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் எல்லாமே மனது மறக்காத மெல்லிசை மெட்டுக்கள். சின்னத்தம்பிக்குப் பிறகு பிரபுவின் நடிப்பில் இன்னொரு all time favorite படம் என்றால் அது மனசுக்குள் மத்தாப்பூ தான். இது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான மோகன்லாலின் தாளவட்டம் படத்தின் தமிழ் ரீமேக். மனநலம் குன்றியவராகப் பிரபு, அழுத்தமான நடிப்பில் சரண்யா பொன்வண்ணன், சரத்பாபு, கண்களாலேயே மிரட்டும் வில்லன் செந்தாமரை எனக் கதாபாத்திரத் தேர்வு கனக்கச்சிதம். படத்தின் இன்னுமோர் attraction கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை விட்டு அகலாத லிஸி ப்ரியதர்ஷன்.

பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூடவா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

“பூந்தென்றலே நீ பாடிவா” பாடல் படத்தில் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெறும். முதல் பாடல் பிரபு – லிஸியின் அட்டகாசமான காதல் கட்சிகளைத் தொடர்ந்து ஜெயச்சந்திரன் – சுனந்தா பாடும் சந்தோஷ டூயட்; இது படத்தின் போக்கையே மாற்றி விடும் லிஸியின் மரணம் சம்பவிக்கும் உச்சக்கட்டக் காட்சிக்கு முன்னர் இடம்பெறும் பாடல்; மேற்கத்தேய வாத்தியங்களின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

இரண்டாவது பாடல் மனநலம் குன்றிய பிரபுவுக்கு மறந்து போன லிஸியின் நினைவுகளை மீட்டெடுக்க சித்ராவின் குரலில் இடம்பெறும் மென்சோகப் பாடல். ஒருபுறம் நினைவுகளை மீட்கப் போராடும் டாக்டராக பாந்தமான நடிப்பில் சரண்யா மறுபுறம் மஞ்சள் நிறச் சுடிதாரில் அழகு தேவதையாக லிசி, நிழலுக்கு நிஜத்திற்கும் நடுவே ஊசலாடும் கதாப்பாத்திரமாக பிரபு என இப்பாடலின் காட்சியமைப்பே மொத்தக் கதையையும் சொல்லி விடும். இதே மெட்டின் சாயலில் எஸ்.ஏ.ராஜ்குமார் பாடிய “வா கண்மணி என் காதலி” எனும் பாடல் கூட இசைத்தொகுப்பில் உண்டு. எனினும் அது படத்தில் இடம்பெற்றதாக ஞாபகம் இல்லை.

தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்
தாங்காமல் பெண்ணுனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலைவனம்
ஹே பிரம்மதேவா தர வேண்டும் நூறாண்டுகள்
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்
அன்பே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

Chithra’s version (Poonthendrale):

Jeyachandran – Sunandha’s version (Poonthendrale):

 

S.A.Rajkumar’s Version (Vaa kanmani):

Vaa kanmani En Kadhali

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s