அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் (சந்திரலேகா)

95 இல் இசைஞானி இசையமைத்து இரண்டு விஜய் படங்கள் வெளியாகின. முதலாவது ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே. மற்றையது நம்பிராஜன் இயக்கத்தில் தீபாவளி வெளியீடாக வந்த சந்திரலேகா; விஜயகுமாரின் மகள் வனிதா கதாநாயகியாக அறிமுகமானது இப்படத்தில் தான். இன்று வரை இப்பாதை நினைவிற் கொள்ளக் காரணமே அட்டகாசமான பாடல்களே. அதிலும் உன்னி கிருஷ்ணன் – ப்ரீத்தி உத்தம்சிங் இணைந்து பாடிய “அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்…” பாடல் வந்த புதிதில் ரொம்பவே பிரபலம்.

அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்
பனியே பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும்
கனியே கனிப் பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

இந்தப் பல்லவியைக் கேட்டு மயங்காதோர் யாரும் உளரோ. இன்று வரை இந்தப் பல்லவியைத் தவிர்த்து வேறேதும் மனதில் நின்றதில்லை. சங்கதிக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் கவிதையை வடித்த வித்தகக் கவிஞர் வாலியைச் சிலாகிப்பதா? இல்லை வார்த்தைகளுக்கு வலிக்காத வகையில் மெட்டமைத்த இளையராஜாவை போற்றுவதா? பின்னணியில் ஒலிக்கும் அந்த கிட்டாரின் நரம்பிசை மனதின் நுண்ணுணர்வுகளைக் கூடக் கிளர்ந்தெழச் செய்யும்.

பாடலின் இன்னுமோர் சிறப்பம்சம் அருண்மொழியின் தனித்துவமான குரல். நெப்போலியன் இவரது இயற்பெயர். இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் வாசிப்பாளர். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் “ஒரே முறை உன் தரிசனம்” பாடல் தான் இவர் முதன்முதலாக இளையராஜாவுக்காக வாசித்தது. சொல்லத் துடிக்குது மனசில் வரும் “பூவே செம்பூவே” பாடலின் புல்லாங்குழல் இசை கூட இவரது கைவண்ணம் தான். சூரசம்ஹாரம் படத்தில் வரும் “நான் என்பது நீயல்லவோ தேவதேவி” பாடலில், பின்னணிப் பாடகராக இவரை அறிமுகப்படுத்துகையில் அருண்மொழி எனப் பெயர் சூட்டியது இளையராஜா தான். இப்பாடலின் பெண்குரல் கீதா.

இனிமையான பொன் மாலை வேளை
வளையோசை தூது வந்ததே
இளைய ராணி வரும் நேரம் என்று
இனிப்பான சேதி சொன்னதே
பூமாலை நீ சூடவே
பாவையாய் மண்ணில் தோன்றினேன்
என் ஜீவன் நீயாகவே எனதெல்லை
நானும் தாண்டினேன்
வானும் பூமி வாழும் காலம்
நானும் நீயும் வாழலாம்

இதே பாடல் அருண்மொழி – உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடிய Bit song ஆகவும், “தரை வாராமல் ஆகாய மேகம்” எனும் சோகப்பாடலாகவும் இசைத்தொகுப்பில் உண்டு. இது தவிர காமகோடியன் வரிகளில் பவதாரிணி பாடிய “அனல் தனில் வாடிடும் பூவை”, ஸ்வர்ணலதா குரலில் ஒலிக்கும் peppy மெலடியான “அடிக்கடித் துடிக்கும்” பாடல்கள் கூட அலாதியானவை தான்.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s