நிவேதா (நீ பாதி நான் பாதி)

தமிழ்த்திரை இசையின் புதுமையானதோர் முயற்சி இந்த ஒற்றைச் சொல் பாடலான நிவேதா. வரிகள் ஏதுமின்றி வெறுமனே நிவேதா எனும் கதாநாயகியின் பெயரை மாத்திரம் உபயோகித்து ஸ்வரங்கள் துணை சேர்த்து வண்ணத் தோரணம் புனைந்திருப்பார் இசையமைப்பாளர் மரகதமணி. இசை இளையராஜா எனத் தவறுதலாக இணையதளங்களில் குறிப்பிடப்படுவது உண்டு. கேளடி கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தின் அடுத்த படைப்பாக 1991 இல் வெளியான நீ பாதி நான் பாதி படத்தில் ரகுமான் – கெளதமி ஜோடிக்குப் பின்னணியில் இடம்பெறும் பாடல்.

வார்த்தைகளே இல்லாமல் ஒற்றைச் சொல்லிலேயே நகரும் சவாலான பாடல் SPB இன் குரலை விட வேறு யாருக்குப் பொருத்தமாக இருந்திருக்க முடியும். அதுவும் ஒவ்வொரு தடவையும் நிவேதா எனும் சொற்பதப் பிரயோகத்தில் அவர் காட்டும் பண்பேற்றம் வாய்ப்பே இல்லை. இந்த வகையறாவில் வேறு பாடல்கள் இதற்கு முன்னரோ பின்னரோ வந்ததாகத் தெரியவில்லை. மேலும் குறுகிய நேரப் பாடலில் அதிக ஷாட்கள் கொண்டு எடுக்கப்பட்ட ஒளிப்பதிவும் புது முயற்சியாகப் பேசப்பட்டது அக்காலத்தில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s