இதோ காதல் வானம் (காதல் பகடை)

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சின்னத்திரைப் படைப்புக்கள் பெருமளவு அவரது வெள்ளித்திரைப் பாணியிலேயே அமைந்திருந்தன. குறிப்பாக அவர் சித்தரிக்கும் பெண் கதாப்பாத்திரங்கள், திரைப் பிரபலங்களை முக்கிய பாத்திரத்தில் பயன்படுத்தியமை (ஆரம்பக் காலகட்டத்தில்), பாடல்களினூடே கதையை விவரிக்கும் பாங்கு எல்லாமே அவர் திரைப்படங்களில் பயன்படுத்திய உத்திகள் தான். எனவே அவரது சின்னத்திரைத் தொடர்களில் கூடப் பாடல்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை.

அன்றைய முன்னணித் திரை நட்சத்திரங்களான ரகுமான், மோகினி மற்றும் வேணு அர்விந்த் இணைந்து நடித்த காதல் பகடை தொடரில் உன்னி கிருஷ்ணன் குரலில் இடம்பெறும் அழகான தமிழ் கசல் (Ghazal) வையறாவைச் சேர்ந்த பாடல் இது. டைட்டிலில் பாடல்கள் இளந்தேவன் எனவும், இசை வி.ஆர்.சம்பத்செல்வன் எனவும் குறிப்பிடப்படுகிறது; மேலதிக விவரங்கள் இல்லை. இதன் ஆர்மோனிய இசையும், மெல்ல நடை போடும் தபேலாவும் எப்பொழுது கேட்டாலும் கொஞ்சம் கிறங்கடிக்கவே செய்யும். ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்…

இதோ காதல் வானம் என் கை தொடாத தூரம்
உருகி உருகி இதயம் கரையுதே
ஏன் இந்த பொய் மௌனமே

ஸ்வரமே ஸ்வரமே காதல் ஸ்வரமே
என் தேகம் என் ஜீவன் நான் உனக்கே தருவேனே
ஸ்வரமே ஸ்வரமே காதல் ஸ்வரமே
என் ஆசை நிறைவேறும்

இது மண்ணின் மேல் பெண்ணின் மேல் சத்தியம் சத்தியம்
வெல்லவே நான் பிறந்தேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s