டோரா (2017)

 

மாயா வெற்றிக்குப் பின் மீண்டும் நயனின் சோலோ பெர்ஃபாமன்ஸ், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் டீசர்/ ட்ரெய்லர் ஏற்படுத்திய ஹைப், அதீத விளம்பரங்கள், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஈடான தியேட்டர் ரிலீஸ் என டோரா ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்புக்கள் ரொம்பவே அதிகம். இத்தனை எதிர்பார்ப்புக்களையும் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி பூர்த்தி செய்திருந்தாரா? எனக் கேட்டால் பதில் ஓரளவிற்கே. முழுமையான ஃபான்டஸி படத்தை த்ரில்லர்/ ஹாரர் படமாக விளம்பரப்படுத்தியமை முதல் தவறு. இத்தகைய விளம்பரங்கள் ஃபான்டஸியை விரும்பும் குழந்தைகளை ஈர்க்கத் தவறுவது மாத்திரமன்றி த்ரில்லர் சப்ஜெக்ட்டை எதிர்பார்த்து வருபவர்களையும் ஏமாற்றச் செய்யும் அபாயம் நிறையவே உண்டு.

வெறும் துணைக் கதாப்பாத்திரமாக வந்து போவதோடு திருப்திப்பட்டுக் கொள்ளும் இன்றைய நடிகைகளுக்கு மத்தியில், முன்னணி நாயகர்களின் பட வாய்ப்புக்களைக் கூட உதாசீனப்படுத்தி விட்டு செலக்டிவ்வாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாராவின் தன்னம்பிக்கைக்கு கண்டிப்பாக சபாஷ் போடலாம்.
தனியொருவராகப் படத்தைத் தாங்குகிறார் நயன்தாரா. ஏளனமாகப் பேசும் உறவினர்களிடம் சீறுவது, பெண் பார்க்க வந்த ஹரிஷ் உத்தமன் நிராகரிக்கும் போது ஒரு புறம் அவரிடம் சவால் விட்டு விட்டு மறுபுறம் தந்தையிடம் சினுங்குவது, தன் காரால் நிகழும் முதல் கொலையை நேரில் காணும் அந்த கணம் பயத்தைக் கண்களாளேயே வெளிப்படுத்துவது, விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போலீஸிடம் கெத்துக் காட்டுவது என நயன்தாராவின் பெர்ஃபாமன்ஸ் பக்கா மாஸ்.

Dora2

அனுவர்தனின் ஆடைத் தேர்வுகள் நயனின் ஸ்கின் டோனுக்கு அவ்வளவு அழகாகப் பொருந்திப் போகின்றன.  கதாப்பாத்திரத்தின் மேனரிசத்தை வெளிப்படுத்த நயன் பயன்படுத்தும் குழந்தைத்தனமான மொழி நடை ரசிக்க வைக்கிறது. ஆனாலும் சில இடங்களில் டப்பிங் சரியாகப் பொருந்தாமல் இருப்பது கொஞ்சம் உறுத்தல்.

நயனைத் தாண்டி படத்தில் நம்மை ஈர்க்கும் கதாப்பாத்திரம் என்றால் அது டோரா தான். யார் அந்த டோரா? நயனா? இல்லை அந்த காரா? இல்லை வேறேதுமா? என்பதை திரையில் பார்க்கவும். வழமையான பழி வாங்கும் கதையை அமானுஷ்யம் + ஃபான்டசி முலாம் பூசி ஒப்பேற்றி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியில் மிஸ்ஸிங். ஜவ்வாக இழுபடும் முன்பாதி திரைக்கதையில் சுவாசியமான காட்சியமைப்புகள் கூட இல்லாமை ஒருவித சலிப்பையே தருகிறது. இடைவேளைக்கு முந்திய அந்த கார் கொலையில் இருந்து தான் படம் வேகம் பிடிக்கிறது.

Dora3

நயன்தாரா வாங்கும் காரில் ஏற்படும் அமானுஷ்யங்கள், அடுத்தடுத்து நிகழும் கொலைகள், டோராவின் பின்னணி, நயனுக்கும் டோராவிற்கும் இடையான தொடர்பு போன்றவை படத்தின் சுவாரசியமான முடிச்சுக்கள். நெகிழச் செய்யும் டோராவின் ப்ளாஷ்பாக் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும். அந்த காட்சிகளில் பின்னணி இசையும் அபாரம். விவேக் – மேர்வின் இரட்டையர்கள் இசையில் எங்க போற டோரா மட்டுமே ஈர்க்கிறது. அனிருத் பாடிய ரா ரா ரா பாடலில் சப்தங்களின் ஆக்கிரமிப்பு பாடலைச் சிதைத்து விட்டது. பாடல்கள் கதையின் ஓட்டத்தினூடே வருவதால் பாதகமில்லை. பின்னணி இசை இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறது.

எடிட்டர் கோபி கிருஷ்ணா முன்பாதிக்குக் கொஞ்சூண்டு கத்திரி போட்டிருக்கலாம். இரண்டாம் பாதி ஓகே தான்; தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பக்க பலம்; குறிப்பாக இரவுக் காட்சிகள், shadow sequences, கார் சேசிங் காட்சிகள் அருமை. ஹரிஷ் உத்தமன் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். அவரது விசாரணைகள் காட்சிகள் அலுப்புத் தட்டாமல் கதையை நகர்த்திச் செல்ல உதவுகிறது. அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். தம்பி ராமையா சில நேரங்களில் சிரிக்க வைத்தாலும் பல நேரங்களில் கடுப்படிக்கிறார்.

முன்பாதியை நயன்தாராவின் பெர்ஃபாமன்ஸூம், பின்பாதியை டோராவின் அட்டகாசங்களும் தூக்கி நிறுத்துவதால் குறைகளை மறந்து கொஞ்சம் ரசிக்க முடிகிறது இந்த டோராவை. மொத்தத்தில் டோரா – Average fantasy movie. Family audience may enjoy.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s