செண்பகப் பூவைப் பார்த்து (பாசமலர்கள்)

வி.எஸ்.நரசிம்மனின் மயிலிறகாய் வருடும் மெல்லிசையில் என்றுமே மனதை விட்டு அகலாத பாடல். சுரேஷ் மேனனின் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்திற்காக சுஜாதா – பாலசுப்ரமணியம் இணைந்து பாடியது. பாடலுக்கு முத்தாய்ப்பாய் அமைவதே வெறும் தபேலாவுடன் பவனி வரும் இதமான பல்லவி தான்.

செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று

இடையீடு இசைத்தனிலே வரிசையாக இடம்பெறும் கிடார், புல்லாங்குழல், கீபோர்ட் பகுதிகள் இளமைத் துள்ளலின் உச்சக்கட்டம். அதற்கு ரேவதி – அரவிந்தசாமி நடிப்பில் கொப்பளிக்கும் குறும்புகள் எப்போது பார்த்தாலும் பாடலோடு ஒன்றி விடச் செய்யும். வாண்டுகளாகக் கூட நடித்திருக்கும் சுஜிதா, காயத்ரி, தீபா வெங்கட், துர்கா எல்லோருமே இன்றைய சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரங்கள். ஏனோ தெரியவில்லை சிலர் இந்தப் படத்தை ரஹ்மான் வரிசையில் தவறுதலாகச் சேர்ப்பதுமுண்டு.

மடியில் பிறந்த நதியை மலைகள்
மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள்
சிறையில் வைப்பதும் இல்லை

மனிதன் கொண்ட காதல் மட்டும்
மறைத்து வைப்பதென்ன
மலைக் காட்டில் ஆடுந்தளிர் போல்
மனந் துடிப்பதுமென்ன

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s