மூன்றெழுத்து அது மூன்றெழுத்து (காசளவு நேசம்)

அமைதியான சூழலில் கண்களை மூடிக் கேட்டால் வேறோர் தளத்திற்கே அழைத்துச் செல்லும் தமிழ் Gazal வகையறாப் பாடல். இது பாலச்சந்தரின் காசளவு நேசம் தொடரில் இடம்பெற்றது. இதுவரை கேட்டிரா விட்டால் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். தம்புரா மற்றும் தபேலாவுடன் நகரும் இதமான பாடல் இடையீட்டு இசை தனில் வீணை சேரும் போது கொடுக்கும் உணர்வே தனி. பாடியவர், எழுதியவர் விபரம் ஏதும் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மூன்றெழுத்து அது மூன்றெழுத்து
கொஞ்சம் மூழ்கிப் பார்த்தால்
கோடி தலையெழுத்து (2)

மூன்றெழுத்து அந்த மூன்றெழுத்து
காதல் என்னும் மூன்றெழுத்து

தொலைபேசி இதன் தோழியடி இதில்
தொலைந்தவன் பெயரே ஞானியடி
உயிரெழுத்து காதல் உயிரெழுத்து
சிலரது வாழ்வில் பொய்யெழுத்து

இது வாலிபத்தில் வரும் கோளாறு
இதனால் வரலாறு முழுவதும் தகராறு
இது கரை உடைக்கும் காட்டாறு
இதில் வரவும் செலவும் கண்ணீரு
இது கையில் அடங்காத தாளக்கட்டு
அடக்கி விட்டால் நீ தாலி கட்டு

கன்னியர் இலக்கணம் தேடப் போய்
காணாமல் போனோர் பட்டியலில்
கம்பனை முதலில் போடுங்கள்

கம்பன் ஏமாந்தான் எனப் பாடியே
நானும் ஏமாந்தேன் எனச் சொன்ன
கவியரசனையும் இதில் சேருங்கள்

காதலே கண்ணதாசன் காகிதம்
கனத்தது உன்னால்
காதலே வாலியின் பேனாவுக்கு
வாலிபம் உன்னால்
காதலே வைரமுத்து நிறம் கூட
சிவந்தது உன்னால்

காதலே காதலே காதலே
அள்ள அள்ளச் சுரந்தாயே
ஏமாளியாய் நின்றாயே (2)
கவிகளிடம் கறக்க மறந்தாயே
கப்பம் கறக்க மறந்தாயே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s