தொலைவினிலே வானம் (கோடீஸ்வரன்)

முடங்கிப் போன படைப்புகளால் வெளித்தெரியாமல் காணாமல் போன பாடல்கள் ஏராளம். எப்போதாவது அந்தப் பாடல்கலைக் கேட்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் நினைவுகள் மெல்ல மெல்ல பின்னோக்கி அசை போடுவது வழக்கம். அந்த வகையில் 90 களின் இறுதியில் வெளிவந்த கேட்கத் திகட்டாத பாடல் வெளியாகாத கோடீஸ்வரன் படத்திற்காக.

தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ நடந்து… போ!! கூட… என் நிழல் வரும் !! 

90 களின் ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் எனப் பல பிரமாண்டத் தயாரிப்புகளைக் கொடுத்தவர் கே.டி.குஞ்சுமோன்; தன் மகன் எபியை அறிமுகப்படுத்துவதற்காக எடுத்த படம்; சிம்ரன் நாயகி; இதற்காக வெளியிடப்பட்ட விளம்பரப் படம் இன்னும் பலருக்கு நினைவில் இருக்கலாம். அத்தனை பிரமாண்டமாக இருக்கும். பைனாஸ் சிக்கல்கள் காரணமாகத் திரையைத் தொடாமல் போனது தான் துரதிர்ஷ்டம். இன்றளவும் மறக்க முடியாத பாடல்களைத் தன்னகத்தே கொண்டது தன் இவ்விசைத்தொகுப்பிற்க்கு ஆனந்த், கோபால்ராவ், ஷலீன் எனும் மூவர் கூட்டணி இணைந்து அகோஷ் எனும் பெயரில் இசையமைத்திருந்தனர். பின்னாட்களில் வெளியான கார்த்திக்கின் ஹரிச்சந்திரா படத்திற்கும் அட்டகாசமான பாடல்களைத் தந்திருந்தது இந்தக் கூட்டணி.

ஹரிஹரன் இசைத்தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. வரிகள் வைரமுத்து; முகப்பிசையில் வரும் இதமான ஹம்மிங்; கூடவே கீபோர்ட், பேக்கப்பாக ஒலிக்கும் கிடார்; முதல் இடையீட்டு இசையிலே பெண் குரலில் வரும் ஹம்மிங் எல்லாமே பாடலை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s