பொன்வானிலே எழில் வெண்மேகமே (அன்பின் முகவரி)

இந்தப் பாடல் உருவான பின்னணி அதிசுவாரஸ்யமானது. தமிழ் படைப்புலகத்தில் தவிர்க்க முடியாத படம் ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான். ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா என முன்னணி நட்சத்திரங்களை வைத்து வணிக சமரசங்கள் இல்லாத கதைக்களத்தைத் தந்தவர். தொடர்ந்து அவர் இயக்கிய கிராமத்து அத்தியாயம் சுமாராகப் போகவே கமலை வைத்து 1982 இல் ராஜா என்னை மன்னித்து விடு எனும் படத்தைத் தொடங்கினார். அந்த நேரம் தான் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூன்றாம் பிறை போன்ற பரீட்சார்த்த முயற்சிகளைக் குறைத்து முதல்நிலைக் கதாநாயனாக முதலில் நிலைநிறுத்துக் கொள்ளுமாறு கமலை அறிவுத்தினார். எஸ்.பி.முத்துராமன் களத்தூர் கண்ணம்மாவில் உதவி இயக்குனாராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே கமல் மேல் அதீத அக்கறை கொண்டவர். அவரது அறிவுறுத்தலின் படி கமல் ருத்ரய்யாவின் படத்திலிருந்து விலகி வணிகப் படங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தினார். இதே 1982 ஆகஸ்டில் தான் கமலின் சகலகலா வல்லவன் வெளியாகி சக்கை போடு போட்டது.

ab2

கமலின் விலகலுக்குப் பிறகு 15 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்தப் படத்திற்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – சுசீலா இணைந்து பாடிய பாடல் தான் “பொன்வானிலே எழில் வெண்மேகமே”. பின்னாட்களில் மோகனின் அன்பின் முகவரி படத்திற்காக உபயோகப் படுத்தப்பட்டது. அந்த நேரம் இயக்குனர் மணிவண்ணன் மோகனை வைத்து ஜோதி, 24 மணி நேரம், நூறாவது நாள், தீர்த்தக் கரையினிலே, இளமைக் காலங்கள், அம்பிகை நேரில் வந்தாள் என வெற்றிப் படங்களாக் கொடுத்த நேரம். ஆனால் அன்பின் முகவரி எதிர்பார்த்த வெற்றியைத் தராது விட்டாலும் பாடல்கள் வழக்கம் போல் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. இந்தப் பாடலின் சிறப்பே இடையீடு இசைத்தனிலே வரும் வயலின் பகுதிகள் தான். மேலும் “வான் சிவந்தது பூ மலர்ந்தது…”, “உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா..” போன்ற அருமையான பாடல்களைக் கொண்ட இசைத்தொகுப்பு இது.

பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே.. என் தேவி..

தாளாத மோகங்கள் சங்கீதமே
தாலாட்டும் என் நெஞ்சில் இந்நேரமே
கேளாத ராகங்கள் ரீங்காரமே
கேட்கின்றதென் உள்ளம் உன்னோரமே
என் ஆசை என் பூஜை உன்னோடு
தீராமலே சேர்ந்தாடுதே…

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s