உன் மேல் பிழை (குறும்படம்)

Impression எனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் அழகான உணர்வானது புறத் தோற்றத்தைச் சார்ந்திருக்கும் வெறும் வார்த்தைப் பிரயோகமல்ல; அது உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; இதயத்தைத் தொடுவதென்பதே அதன் உண்மையான வெற்றி எனும் கருவுடன் வெளிவந்திருக்கும் குறும்படம் தான் உன் மேல் பிழை. நெகிழ வைக்கும் திருப்பங்கள் இல்லை; வார்த்தைப் பிரயோகங்கள் ஒன்றேனும் இல்லை. இயல்பான காதல் கதை தானே என்னும் அசமந்தப் போக்குடன் இருந்து விட்டால், ஆங்காங்கே சின்னச் சின்ன ஆச்சரியங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர் சத்ரியன் T.பிரபு.

ஒரு புகைப்படக் கலைஞனின் நாளந்தத் தேடல்களோடு காட்சிகள் விரிய ஆரம்பிக்கின்றன. தெருவோரத்தில் நிற்கும் இளம் பெண் தன்னை நோக்கிக் கை காட்டுவதாக நினைத்து அடுத்த காட்சியில் மூக்குடைபடுவதிலேயே தெரிகிறது அவனது தேடல்கள் கேமரா கண்களோடு முடியவில்லை என்பது. என்ன பசியோ அவனுக்கு? மெல்ல மெல்ல அருகேயிருக்கும் பூங்காவிற்குள் நடை பழகுகிறான். காமெராவின் தேடல்களுக்கு விடை தேடிப் பூங்காவிற்குள் நுழையும் அவனுக்குக் காமெராவின் கண்கள் வழியே அவனது தேடலுக்கும் விடை கிடைக்கிறது. அங்கு ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்காக அடுத்த நாளும் வருகிறான்.எதேச்சையாக விட்டுச் செல்லும் ஓவியப் புத்தகம் அவன் கைகளுக்குக் கிடைக்கிறது. திறந்து பார்க்கும் அவனுக்காகக் காத்திருக்கும் ஆச்சரியம் என்ன? அந்தப் பெண் நேசிக்கும் ஓவியக் கலை மூலமாகவே அவளை ஆச்சரியப்படுத்துவது எப்படி? என்பதே படத்தின் சுவாரசியமான இறுதிக் காட்சி.

un2.png

சாலையோரப் பெண்ணின் சைகையில் மயங்கி பல்பு வாங்குவது, கேமரா வழியே ஓவியம் வரையும் பெண்ணைப் படம் பிடித்து விட்டு, அவள் பார்த்தது ஏதுமறியாதது போல் படபடப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் கவனத்தை ஈர்க்கிறார் ஜோய் பிரவீன். இயல்பான நடிப்பில் கவர்கிறார் சங்கீதா சிவசாமி. ஆரம்பத்தில் பாராமுகமாக இருப்பது, தொலைத்த ஓவியப் புத்தகத்தை எதேச்சையாகக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விடுவது, ஆச்சரியங்கள் விரிய விரிய மெதுவாக முகம் மலரும் காட்சிகளில் உணர்வுகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார்.

நாயகனின் வீடு, சாலையோரம், பூங்கா எனும் மூன்று கதைக்களங்களில் பயணிக்கிறது திரைக்கதை. பூங்காவிற்குள் நிகழும் காட்சிகள், காமெராவின் கண் வழியே நாயகியை அறிமுகப்படுத்தும் காட்சிகள் எல்லாம் படம் பிடிக்கப் பட்ட விதம் அருமை. ஆனாலும் புகைப்படக் கலைஞனாக அறிமுகப்படுத்தப்படும் நாயகன் எடுக்கும் புகைப்படங்கள் ஏதும் அட சொல்ல வைக்கும் ரகமாக இல்லாதது குறையே. வார்த்தைகளேதும் இல்லாததால் பின்னணி இசையையே காட்சிகள் நகர்கின்றன. ஆச்சரியங்கள் விரியும் இறுதிக் காட்சி உட்பட பல காட்சிகளில் ஸ்ரீனிவாசனின் பின்னணி இசை ஈர்க்கிறது.

un3

நாயகியின் பாராமுகத்தை வெறுப்பு எனத் தவறான புரிதல் கொள்வதால் உன் மேல் பிழை எனும் தலைப்பைச் சூட்டி இருக்கலாம். அல்லது உள்ளத்தின் உணர்வுதனை மறைத்தது உன் பிழை என நாயகியின் மீது பழி போடுவதாக எண்ணிக் கொள்ளலாம். முதல் முறை சந்திக்கும் ஒருவனைப் பார்த்ததும் பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அவளுக்கு இல்லை என்பதால் இரண்டாவது காரணம் அடிபட்டுப் போகிறது. கடைசியாக வெறும் புறத்தோற்றத்தைக் கண்டு மயக்கும் சமூகத்திற்கு உள்ளத்தைத் தொடுவது தான் காதல் என்பதைப் பதிவு செய்வதாக இந்தத் தலைப்பை வைத்திருக்கலாம். தலைப்பை நியாயப்படுத்துவதற்கான இரண்டு காட்சிகள் வைத்து இந்தக் குழப்பத்தைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இந்த இயல்பான காதல் கதை.

Watch Un Mel Pizhai Short Film

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s